உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முக அங்கீகாரம் வாயிலாக பி.எப்., யு.ஏ.என்., பெறலாம்

முக அங்கீகாரம் வாயிலாக பி.எப்., யு.ஏ.என்., பெறலாம்

புதுடில்லி:பணியாளர்கள் யு.ஏ.என்., கணக்கு எண்ணை பெறுவதற்கு முக அங்கீகாரத்தை கொண்டே பதிவு செய்யும் நடைமுறையை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிமுகப்படுத்தினார். இ.பி.எப்.ஓ., எனும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெறுவதற்கு யு.ஏ.என்., கணக்கு எண் அவசியமானது.இ.பி.எப்.ஓ., உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான மற்றும் முழுமையான டிஜிட்டல் நடைமுறையை அமல்படுத்தும் விதமாக, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, உமங் செயலியில் ஆதார் வாயிலான முக அங்கீகாரம் அடிப்படையில் யு.ஏ.என்., கணக்கு எண்ணை பெற முடியும் என அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை