உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கவனிக்க வேண்டிய துறைகள்

 கவனிக்க வேண்டிய துறைகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் இன்று எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு செல்லாது என, அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், தன் 'சிறப்பு அதிகார சட்டப்பிரிவு 122'ஐ பயன்படுத்தி, அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 15 சதவீதம் வரி விதித்துள்ளார். இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் நடைபெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜவுளி, ஆபரணங்கள், ஆட்டோமொபைல், கெமிக்கல் உள்ளிட்ட ஏற்றுமதி துறை சார்ந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ