உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / சுறுசுறுப்பாகும் பீமா சுகம்

சுறுசுறுப்பாகும் பீமா சுகம்

கா ப்பீடுகளுக்கான கண்காணிப்பு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அண்மையில் துவக்கிய, 'பீமா சுகம்' ஆன்லைன் தளத்தில், விரைவில் இரண்டு முதல் மூன்று காப்பீடு திட்டங்களும்; இணையவழி கே.ஒய்.சி., வழிகாட்டலும் இடம்பெற உள்ளன. மருத்துவம், ஆயுள் மற்றும் பொது காப்பீடு நிறுவனங்களின் பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்; முழுமையான தகவல்களை ஒரே இடத்தில் பெறவும், வாடிக்கையாளர்களுக்கு உதவ, பீமா சுகம் இணைய தளத்தை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., துவக்கியுள்ளது. அதில் காப்பீடு திட்டங்களில் சேரவும், பல்வேறு காப்பீடு பாலிசிகளை எளிதாக நிர்வகிக்கவும் வசதி அளிக்கப் படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள், இ-கே.ஒய்.சி., வசதி மற்றும் புதிய காப்பீடு திட்டங்களின் விபரம் ஆகியவை அதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி