மேலும் செய்திகள்
நடப்பாண்டில் ஐ.டி., பங்குகள் 22% சரிவு
18 hour(s) ago
கனோஹர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்
18 hour(s) ago
தினம் ஒரு பங்கு
07-Sep-2026
தங்க பத்திர முதலீடு 227% லாபம்
07-Sep-2026
சந்தை விலை நிலவரம்
06-Sep-2026
ஆதித்யா பிர்லா குழுமம் தனது 'அல்ட்ராவோல்ட்' பிராண்டு வாயிலாக கேபிள் மற்றும் வயர் வணிகத்தில் களம் இறங்கியுள்ள செய்தி வெளியானதை தொடர்ந்து, பங்கு சந்தையில் முன்னணி கேபிள் நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளன. இருப்பினும், இந்த தற்காலிக சரிவை கண்டு சிறு முதலீட்டாளர்கள் பயந்து பங்குகளை விற்கவோ அல்லது அவசரப்பட்டு கூடுதல் பங்குகளை வாங்கவோ தேவையில்லை என 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: பிர்லா குழுமம் பெயின்ட் துறையில் ஆதிக்கம் செலுத்தியதுபோல கேபிளிலும் ஆதிக்கம் செலுத்தும் என பயப்பட வேண்டாம். கேபிள் தொழில் குறைந்த லாப வரம்பு கொண்ட, எலக்ட்ரீஷியன்களின் பரிந்துரையை நம்பியுள்ள துறை. சிமென்ட் வினியோக நெட்வொர்க், பிர்லாவின் வயர் விற்பனைக்கு நேரடியாக உதவாது. இந்த வணிகத்தில் 2வது இடம் என பிர்லா குழுமம் அறிவித்திருப்பது வீட்டு வயர்கள் உற்பத்தி திறனுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த கேபிள் சந்தையையும் இது பாதிக்காது. இந்திய கேபிள் மற்றும் வயர் துறை ஆண்டுக்கு 12.50 சதவீத வேகத்தில் வளர்கிறது. உள்கட்டமைப்பு, மின்மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டேட்டா சென்டர் தேவைகளால் சந்தையின் அளவு பெரிதாகி கொண்டே செல்கிறது. பிர்லாவின் வருகை, முறைசாரா மற்றும் தரம் குறைந்த வயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களின் சந்தை பங்கைத்தான் பாதிக்குமே தவிர, முன்னணி பிராண்டுகளின் வளர்ச்சியை பாதிக்காது.
18 hour(s) ago
18 hour(s) ago
07-Sep-2026
07-Sep-2026
06-Sep-2026