மேலும் செய்திகள்
ஃபோரக்ஸ் காத்து நிற்கும் ரிசர்வ் வங்கி
07-Nov-2025
ரூபாய் படிப்படியாக பலம் பெறுகிறது
15-Oct-2025
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சில் சாதகமான முன்னேற்றம் தெரிவது, நேற்று ரூபாய் மதிப்புக்கு வலுவை ஏற்படுத்தியது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் வாஷிங்டன் மிக நெருக்கமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருப்பது மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களின் ஆதரவும் ரூபாய்க்கு கூடுதல் வலிமையை ஏற்படுத்திஉள்ளன. அமெரிக்காவில், 40 நாட்களாக நீடித்த அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, செனட் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, சந்தைக்கு சிறிய நம்பிக்கையை தந்துள்ளது. இருப்பினும், டாலரின் சமீபத்திய வலிமை, உறுதியான பொருளாதார அடிப்படைகளால் அல்ல; மாறாக எதிர்மறை செய்திகள் இல்லாததே காரணம். பீஹார் சட்டசபை தேர்தல், கேரள உள்ளாட்சி தேர்தல் போன்றவை ரூபாயில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், பரந்த பொருளாதார காரணிகளான கச்சா எண்ணெய் விலை, ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை, வெளிநாட்டு முதலீடுகள் போன்றவையே ரூபாயின் மதிப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி தலையிட்டது, சந்தை பங்கேற்பாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நடவடிக்கை, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி செல்லாமல் தடுத்துள்ளது. குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பு 88.40 - -88.80 என்ற இலக்கில் நீடிக்க வாய்ப்புள்ளது. 88.40ஐ விட, ரூபாயின் மதிப்பு சரியும்பட்சத்தில், அது மீண்டும் 87.70 -- 88.00 நிலையை நோக்கி வலுப்பெற வாய்ப்புள்ளது.
07-Nov-2025
15-Oct-2025