உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் தளர்கிறது கட்டுப்பாடுகள்

 கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் தளர்கிறது கட்டுப்பாடுகள்

செபியால் அமைக்கப்பட்டுள்ள குழு, கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த, விரைவில் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊக வணிகத்தால் விலை உயர்வு ஏற்படும் எனக்கூறி நெல், கோதுமை, கச்சா பாமாயில் உள்ளிட்ட ஏழு பொருட்களை டெரிவேட்டிவ் வர்த்தகம் செய்ய 2021ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையையும் நீக்க இந்த குழு பரிந்துரைக்கும் என தெரிகிறது. இவைதவிர, வங்கிகள், ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற நிறுவன முதலீட்டாளர்களை இந்த சந்தையில் அனுமதிக்க, ரிசர்வ் வங்கி மற்றும் அரசையும் அணுக திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாய பொருட்களுக்கு 'மார்ஜின்' தொகையை குறைக்கவும், வரி விகிதத்தை தெளிவாக வரையறுக்க வரிச் சட்டங்களில் மாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி