உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கமாடிட்டி

கமாடிட்டி

செம்பு

சர்வதேச சந்தையில் செம்பு விலை, கடந்த வாரம் ஒரு டன் கிட்டத்தட்ட 11,000 அமெரிக்க டாலர்களை எட்டியது. இது, 16 மாதத்திற்கு பின் ஏற்பட்ட வரலாற்று உச்ச விலையாகும். அமெரிக்க சுங்க வரிகள் மற்றும் பலவீனமான டாலர் காரணமாக, செம்பு விலை உயர்வு ஏற்பட்டது. தற்பொழுது ஒரு டன் விலை 10,670 அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்தோனேஷியாவின், 'கிராஸ்பெர்க்' சுரங்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக உற்பத்தி தடை பெற்றது. இதனால், சந்தையில் கனிமம் கிடைப்பதில் சிரமம் நிலவியது. மேலும் லண்டன் பொருள் வாணிப சந்தையில் செம்பு கையிருப்பு 1.39 லட்சம் டன்களாக குறைந்தது. இது, ஜூலை மாத இறுதியிலிருந்து குறைந்த நிலையாகும். உலகளாவிய சுத்திகரிக்கப்பட்ட செம்பு தேவை 2024ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.70 கோடி டன் ஆக உயர்ந்தது. இது, 2035ம் ஆண்டில் 3.30 கோடி டன்களாகவும், 2050ம் ஆண்டில் 3.70 கோடி டன்களாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டில், மொத்த தேவையில் கிட்டத்தட்ட 60 சதவீத பங்கை சீனா பெற்றது, அதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி வருகின்றன. எனினும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் சீனாவின் பதிலடி சுங்க நடவடிக்கைகள், செம்பு விலை மற்றும் தேவை கணிப்புகளை பெரிதும் பாதித்துள்ளன. அலுமினியம் சர்வதேச சந்தையில், அலுமினியம் விலை, கடந்த வாரம் கிட்டத்தட்ட ஒரு டன் 2,880 அமெரிக்க டாலரை எட்டியது. இது, 18 மாதத்திற்கு பின் ஏற்பட்ட உச்ச விலையாகும். அமெரிக்க சுங்க வரிகள் மற்றும் பலவீனமான டாலர் காரணமாக, அலுமினியம் விலை உயர்வு ஏற்பட்டது. தற்போது ஒரு டன் விலை 2,764 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தொழில்துறை வளர்ச்சி காரணமாக, அலுமினியத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த பல்வேறு நன்மைகளின் காரணமாக, அலுமினியம் டின்கள், பாயில்கள், சமையல் சாதனங்கள், ஜன்னல் சட்டங்கள், பீர் கேன்கள், மற்றும் விமான பாகங்கள் போன்ற எண்ணற்ற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பசுமை ஆற்றல் மாற்றத்தின் முக்கிய கூறாக புதிய பயன்பாடுகளிலும் அலுமினியம் முக்கிய பங்கு வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை