உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கமாடிட்டி

கமாடிட்டி

கச்சா எண்ணெய்

உ லகளாவிய கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தேவையின் வளர்ச்சியோ மந்தமாக உள்ளது. தற்போது, 1 பேரல் 58.50 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. ட்ரோன் தாக்குதல்களை முன்னிட்டு, ரஷ்ய அரசு மேற்கொண்ட மாற்றங்கள் காரணமாக, ரஷ்யாவின் கடல் வாயிலான ஏற்றுமதி 28 மாதங்களுக்கு பின் உச்சத்தை எட்டியுள்ளது. தினமும் சராசரியாக 37.40 லட்சம் பீப்பாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச ஆற்றல் நிறுவனம், எண்ணெய் தேவையின் வளர்ச்சி மிதமாகவே இருக்கும் என்று கணித்துள்ளது. இதற்கு காரணம், சவாலான உலக பொருளாதார சூழல் மற்றும் மின்சார போக்குவரத்துக்கான மாற்றம். நடப்பு 2025ம் ஆண்டில், உலகளாவிய வினியோகம் 30 லட்சம் பீப்பாய் அளவுக்கும்; 2026ம் ஆண்டில் 24 லட்சம் பீப்பாய் அளவுக்கும் கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துத்தநாகம்

ச ர்வதேச சந்தையில் துத்தநாகம் விலை, இந்த ஆண்டின் உச்ச விலையாக 1 டன் 3,080 அமெரிக்க டாலராக கடந்த வாரத்தில் எட்டியிருந்தது. தற்போது 1 டன் 2,954 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, தன்னிடம் உபரியாக உள்ள துத்தநாகத்தை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, விலைகள் கடந்த சில நாட்களாக சரிந்தன. சீனக் கிடங்குகளில் துத்தநாகக் கையிருப்புகள் அதிகரித்துள்ளதால், உள்நாட்டு விலைகளில் விற்பனை அழுத்தம் உருவாகியுள்ளது. 2023 ஆரம்பத்திலிருந்து, 2025 நடுப்பகுதி வரை, ஷாங்காய் பியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச் துத்தநாக கையிருப்பு 70,000 டன்னிலிருந்து 1,50,000 டன்னுக்கு மேல் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி