கிரெடிட் கார்டு தவறவிடும் சலுகைகள்
கிரெடிட் கார்டு வெகுமதிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் 'சேவ்சேஜ்' நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்களில் 70 சதவீதம் பேர், தங்களுக்குக் கிடைக்கும் வெகுமதி மற்றும் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்தத் தவறிவிடுவது தெரியவந்துள்ளது. முக்கிய காரணங்கள்:
குழப்பமான தகவல்கள்: சலுகைகள் மற்றும் வெகுமதிகள் பற்றிய தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடப்பதால், பயனர்களுக்கு முழுமையான புரிதல் இல்லை. விழிப்புணர்வு இல்லாமை: தங்கள் கிரெடிட் கார்டில் என்னென்ன சலுகைகள் உள்ளன என்பதைப் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. சிக்கலான நடைமுறைகள்: வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்தும் வழிமுறைகள் கடினமாக இருப்பதாலும்; அவை பயனற்றதாகத் தோன்றுவதாலும், பலர் பயன்படுத்துவதில்லை. சமூக ஊடக தாக்கம்: 60 சதவீத பயனர்கள், கிரெடிட் கார்டு பற்றிய ஆலோசனைகளுக்கு, சமூக ஊடகங்களில் உள்ள இன்ப்ளூயன்சர்களை மட்டுமே நம்பியிருக்கின்றனர். தெரிந்த வழியில் செல்வது: வெகுமதி புள்ளிகளை சரியாகப் பயன்படுத்தத் திணறுவதால், பயணச் சலுகைகள், பொருட்கள் மீதான பிரத்யேக சலுகைகளுக்குப் பதிலாக, கேஷ்பேக்கை மட்டுமே பெற்று திருப்தி அடைகிறார்கள்.