புதுடில்லி:கிரெடிட் கார்டு செலவுகள் கடந்த ஆகஸ்டில் 13.70 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், புதிய கிரெடிட் கார்டு வினியோகமும் 7 லட்சம் என்ற ஏழு மாத உச்சத்தை எட்டியுள்ளது. பயன்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் 11.23 கோடியாக அதிகரித்துள்ளது.
காரணம்: இரண்டாம் கட்ட நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் ஜென் இசட் தலைமுறையினரின் பயன்பாடு அதிகரித்துள்ளதே, கிரெடிட் கார்டுகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது, அன்றாட செலவுகளுக்கு கிரெடிட் கார்டு பயன்பாட்டை அதிகரிக்கச் செய்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காலம் செலவு (ரூ. லட்சம் கோடியில்) ஆகஸ்ட் 2024 1.68 ஜூலை 2025 1.93 ஆகஸ்ட் 2025 1.91 அதிகம் செலவழிக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் (ரூ. கோடியில்) எச்.டி.எப்.சி., 53,873 ஐ.சி.ஐ.சி.ஐ. 34,492 எஸ்.பி.ஐ., 33,063 ஆக்சிஸ் 21,761 புதிய கார்டுகளில் வங்கிகளின் பங்கு எச்.டி.எப்.சி., 2.21 லட்சம் ஆக்சிஸ் 1.40 லட்சம் ஐ.சி.ஐ.சி.ஐ., 1.30 லட்சம் எஸ்.பி.ஐ., 69,500 மற்றவை 1.40 லட்சம்