உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  எல்.இ.டி., வசதியுடன் கிரெடிட் கார்டு அறிமுகம்

 எல்.இ.டி., வசதியுடன் கிரெடிட் கார்டு அறிமுகம்

'ஏ.யூ., ஸ்மால் பைனான்ஸ்' வங்கி மற்றும் 'செக்' நிறுவனம் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக எல்.இ.டி., வசதியுடன் கூடிய புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன. பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் 'டாப்' செய்யும் போது, அதிலிருந்து வரும் என்.எப்.சி., சிக்னல் வாயிலாகவே கார்டில் உள்ள எல்.இ.டி., ஒளிரும். இதற்கு தனியாக பேட்டரி தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்பவர்களுக்கு, ஆண்டு சந்தாவான 499 ரூபாய் ரத்து என்றும், மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு, முதல்முறை கட்டணம் 999 ரூபாய் முற்றிலும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார்டுக்கு, செக் செயலி வாயிலாக, வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிவார்டு புள்ளிகள் செலவு வகை ரிவார்டு மின்னணு வர்த்தகம், பில் கட்டணம் 12% அன்றாட செலவுகள் 5% ரூபே - யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் 2.5% இதர செலவுகள் 1%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை