| ADDED : டிச 23, 2025 01:10 AM
இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடம், வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமானம் குறித்த விவரங்களை முறையாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. இந்தியா பல நாடுகளுடன் வரி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள சொத்து விவரங்களை அந்நாட்டு வங்கிகள் தானாகவே நம் நாட்டின் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிடும். எனவே, எதையும் மறைக்க முடியாது. எனவே, வெளிநாடுகளில் வங்கி கணக்கு, சொத்து, நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கிருந்து ஈவுத்தொகை ஈட்டுபவர்களும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது அவற்றை தெரிவிக்க வேண்டும். விவரங்களை மறைத்தால், 'கருப்பு பண தடுப்பு சட்டத்தின்' கீழ், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். நீதிமன்ற நடவடிக்கையும் பாயும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்த வருமானவரி கணக்கில், இந்த விவரங்களை குறிப்பிட தவறியிருந்தால், அதை திருத்தி, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.