உள்ளூர் செய்திகள்

துளிகள்

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி எப்.டி., வட்டியை உயர்த்தியது 'ஐ.சி.ஐ.சி.ஐ.,' வங்கி மூன்று கோடி ரூபாய்க்கும் குறைவான 'பிக்சட் டிபாசிட்கள்' மீதான வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றத்திற்கு் பிறகு, மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.20 சதவீதம் வரையிலும், மற்றவர்களுக்கு 6.60 சதவீதம் வரையிலும் வட்டி வருமானம் கிடைக்கும். பிக்சட் டிபாசிட் கால அளவை் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கிரெடிட் கார்டு கட்டணங்கள் மாற்றம் 'பஞ்சாப் நேஷனல்' வங்கி தனது 'விசா மற்றும் ரூபே' கிரெடிட் கார்டுகளுக்கான பல்வேறு சேவைக்கான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நவம்பர் 1ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுப்பதற்கு 2.50 சதவீதம், ரிவார்டு பாயிண்டுகளை மீட்க 99 ரூபாய், ஆட்டோ டெபிட் தோல்வி அடைந்தால் பரிவர்த்தனை தொகையில் இரண்டு சதவீதம் என பல புதிய கட்டணங்களை இந்த வங்கி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !