உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஃபோரக்ஸ் ரூபாய் மதிப்பை தரவுகள் தீர்மானிக்கும்

ஃபோரக்ஸ் ரூபாய் மதிப்பை தரவுகள் தீர்மானிக்கும்

'எச்1பி' விசா கட்டணம் உயர்வால், ரூபாயின் மதிப்பு 88.80 ஆக சரிந்து, இந்த மாதத்தில் நான்காவது முறையாக புதிய சரிவை எட்டியுள்ளது. இந்திய ரூபாய் சரிந்தாலும், அமெரிக்க டாலரும் வலுவாக இல்லை. வட்டி விகித குறைப்பு பற்றி பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது டாலர் மதிப்பை 97.30 என்ற அளவில் தற்காலிகமாக குறைத்துள்ளது. என்ன நடக்கும்? அனைவரின் கவனமும் இப்போது அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை வளர்ச்சியைக் குறிக்கும் பி.எம்.ஐ., தரவுகள் மீது உள்ளது. இந்த தரவுகள் பலவீனமாக வந்தால், டாலர் மதிப்பை மேலும் குறைத்து, இந்திய ரூபாய்க்கு சிறிது ஆதரவு தரும். தரவுகள் வலுவாக இருந்தால் டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மேலும் பலவீனமடையும். எதிர்பார்ப்பு தற்போது, ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 88.40 என்ற முக்கியமான எல்லையைத் தாண்டியுள்ளது. எனவே, இது 89.00 - - 89.10 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரூபாயின் இந்த பலவீனம் தற்காலிகமானதாகவே இருக்கும். இது பெரும்பாலும் டிரம்ப்பின் கொள்கைகளால் ஏற்பட்டது. அமெரிக்க டாலரே வலுவில்லாமல் இருப்பதால், வர்த்தக ஒப்பந்தங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால், இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வேகமாக உயரும் வாய்ப்புள்ளது. அமித் பபாரி,நிர்வாக இயக்குநர்,சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ் istockphoto -2221636964-'எச்1பி' விசா கட்டணம் உயர்வால், ரூபாயின் மதிப்பு 88.80 ஆக சரிந்து, இந்த மாதத்தில் நான்காவது முறையாக புதிய சரிவை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !