மேலும் செய்திகள்
எதிர்மறை செய்தி இல்லாததால் ஏற்றம்
12-Nov-2025
மிடில் கிளாஸ் - டீசர்
05-Nov-2025
அதிக ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, ரூபாய் திங்கள்கிழமை வலுவான ஏற்றத்துடன் வாரத்தை துவ ங்கியுள்ளது. சரியான நேரத்தில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட தலையீடுகள், சந்தையில் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, உள்நாட்டில் டாலர் தேவை திடீரென அதிகரித் தது. அதேநேரம், ரிசர்வ் வங்கியின் தலையீடு, தற்காலிகமாக இல்லாததால், ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. உலகளாவிய சந்தைகளில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், இந்த சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு சரிந் தாலும், சர்வதேச அளவில் அமெரிக்க டா லரின் மதிப்பு பலவீனமடைந்து வருகிற து. கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம், 690 பில்லியன் டாலருக்கு அருகில் உள்ள அந்நிய செலாவணி கையிருப்பு, இரண்டாவது காலாண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் ஜி.எஸ்.டி., வசூல் போன்ற இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படைகள், ரூபாய்க்கு நிலையான ஆதரவை வழங்குகின்றன. அத்துடன், அமெரிக்காவுக்கும் - இந்தியாவு க்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இது, ரூபாய் மதிப்பை மேலும் வலுப்படுத்த வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில், ரூபாய் மதிப்பு 89 என்ற முக்கிய இலக்கிற்கு கீழ் சரிந்த நிலையில், தற்போது, 88.90 - 90.20 என்ற புதிய வர்த்தக பகுதியில் நிலைபெற வாய்ப்புள்ளது. சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டால், ரூபாய் மதிப்பு 50 முதல் 75 காசு வரை உயர வாய்ப்புள்ளது. அதே நேரம், 88.80 என்பது ரூபாய்க்கு முக்கிய ஆதரவு நிலையாக இருக்கிறது.
12-Nov-2025
05-Nov-2025