ஃபோரக்ஸ் : பன்முக அழுத்தத்தை சந்திக்கும் ரூபாய்
இந்திய ரூபாய் மதிப்பு நேற்று மேலும் சரிந்து 94.88 என்ற நிலையை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் குறையாததால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 103 டாலருக்கும் மேலாகவே நீடிக்கிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. 'சன் பார்மா நிறுவனம் ஆர்கனான்' நிறுவனத்தை 11.75 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு ஒ ப்பந்தங்களில் ஒன்று. இதற்காக பெருமளவில் டாலர்கள் வெளியேறுவதால், ரூபாய் மதிப்பில் உடனடி அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய பங்கு சந்தை மற்றும் கடன் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை வெளியே எடுத்து வருவது ரூபாயின் பலவீனத்தை அதிகரித்துள்ளது.