மேலும் செய்திகள்
ஃபோரக்ஸ் ஆர்.பி.ஐ., ஆதரவால் நிலையாக உள்ளது
08-Nov-2025
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது. ரூபாய் மதிப்பை 88.80க்கு கீழ் சரியாமல், பல நாட்களாக ரிசர்வ் வங்கி காத்து வந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் இடையே 98 காசு சரிந்து, 89.66 ஆக வீழ்ச்சி கண்டது. இது, சந்தையில் திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது, செய்திகளின் எதிரொலியாக நடந்த மாற்றமல்ல; மாறாக, முழுக்க முழுக்க டாலர் தேவை அதிகரித்ததே இந்த வீழ்ச்சிக்கு காரணம். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்பார்த்ததைவிட வலுவாக இருந்தன. இதனால், அந்நாட்டு பெடரல் வங்கி, டிசம்பரில் வட்டி விகிதங்களை குறைக்காது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், டாலர் மதிப்பு வலுப்பெற்றது. கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு 87.50 - 87.80 என்ற அளவில் இருந்தது. பிறகு, 88.40 -- 88.80 ஆக சரிந்தது காணப்பட்டது. தற்போது, 88.70 - 89.70 என்ற புதிய வரம்புக்குள் வர்த்தகமானது. இருப்பினும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் நல்ல முறையில் விரைவாக முடியும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நம்பிக்கை தெரிவித்திருப்பது, ரூபாய்க்கு ஒரு அடிப்படை ஆதரவை அளிக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், ரூபாய் மதிப்பு 50 முதல் 75 காசு வரை உயரக்கூடும்.
08-Nov-2025