ஃபோரக்ஸ் : ஆர்.பி.ஐ., நடவடிக்கையால் ரூபாய் வலுவடைகிறது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 95.41 ரூபாயாக ஏற்றம் கண்டது. ரிசர்வ் வங்கியின் புதிய ஊக்க நடவடிக்கைகளும், உலகளாவிய பதற்றம் சற்றே தணிந்ததும் சந்தையில் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அரசு கடன் பத்திர சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, முழுமையாக அணுகக்கூடிய வழியை ரிசர்வ் வங்கி விரிவாக்கம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் உடனடியாக பலன் தராவிட்டாலும், நீண்டகால நோக்கில் 25 பில்லியன் முதல் 30 பில்லியன் டாலர் வரை கூடுதலாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.