உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / தங்க பத்திர முதலீடு: 153 சதவீதம் லாபம்

தங்க பத்திர முதலீடு: 153 சதவீதம் லாபம்

ரிசர்வ் வங்கியால், கடந்த 2020--21ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட ஏழாவது கட்ட தங்க பத்திரக் கணக்கு, நாளையுடன் முதிர்வடையும் நிலையில், யூனிட் ஒன்றுக்கு 12,792 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையோடு ஒப்பிடுகையில், 153 சதவீதம் அதிகமாகும். கடந்த 2020ம் ஆண்டு, அக்டோபர் 20ம் தேதி, ஒரு யூனிட் தங்கத்தின் விலை 5,051 ரூபாய் என தங்க பத்திரம் வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்கூட்டியே விண்ணப்பித்தவர்களுக்கு, நாளை முதல் முதலீட்டை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கத்துக்கு 7,741 ரூபாய் லாபம் கிடைக்கிறது. கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையைக் கொண்டு, யூனிட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை