உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வரலாற்று ச ரிவில் ரூபாய் மதிப்பு

 வரலாற்று ச ரிவில் ரூபாய் மதிப்பு

அ மெரிக்க டாலரின் பலம் மற்றும் ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவாக 96.83 என்ற வரலாற்று சரிவை எட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, இந்திய ரூபாய் தொடர்ந்து எட்டாவது நாளாக வீழ்ச்சியடைந்து, முந்தைய முடிவை விட 50 காசுகள் சரிந்து 96.70 ஆக நிறைவடைந்தது. நேற்று மேலும் சரிந்து 96.86ஐ எட்டியுள்ளது. சரிவுக்கான காரணங்கள்  உலக சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்தது  பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110.59 டாலராக உயர்ந்தது  இந்திய பங்கு சந்தையிலிருந்து கிட்டத்தட்ட ரூ. 2,457.49 கோடி மதிப்பிலான பங்குகளை எப்.ஐ.ஐ., விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !