உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

அப்பு: வாங்க நியுட்ரன். எங்க டவுனை காணோம் நியுட்ரன்: கொஞ்சம் லேட்டாகுமுன்னு சொல்லி மெசேஞ் பண்ணியிருந்தாரு. அப்பு: போனவாரம் நாலு நாள் அவர் கைவரிசையை காட்டீட்டாரு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமா இருந்துச்சு. போகப்போக என்னவாகுமோ ஏதுவாகுமோன்னு பயம் அதிக மாயிடுச்சு. நியுட்ரன் : மேலெழுந்த வாரியா பார்த்தா பெரிய மாற்றமில்லாத மாதிரி தெரியும். ஆனா என்னவொரு கேம் பிளான்! டவுனு: லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும். யாரோ பயம் அதிகமாயிடுச்சுன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு. நியுட்ரன்: அப்பவே வந்துட்டு ஒட்டுக்கேட்டீங்களா டவுனு. டவுனு: பயமுன்னு சொன்னது பக்கத்து தெருவரைக்கும் கேட்டுது. நாலு நாள் 100 புள்ளிக்கும் மேலான ஸ்விங். ஒரு நாள் 200 புள்ளிக்கு மேலான ஸ்விங். வாராந்திர அதிகம்-குறைவுக்கு நடுவே வெறும் 355 புள்ளிகள்தான் வித்தியாசம் இருந்துச்சு. அவ்வளவுதான். இதுல என்ன பயம். நியுட்ரன்: எல்லாம் உங்களுக்கு சாதகமா இருந்ததால உங்களுக்கு பயம் இல்லை. எனக்குத்தான் அப்புவை விட அதிக பயமா இருந்துச்சு. அப்பு: வியாபாரம் பண்ற ஆளை விட வேடிக்கை பார்க்கற ஆளுக்கு பயம் அதிகமா இருந்துச்சாம். நம்புற மாதிரியா இருக்குது. நியுட்ரன்: வர்ற வாரத்துல வேலையில்லாத நபர்கள் குறித்த தரவுகள், இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட், ஹெச்.எஸ்.பி.சி., கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, வங்கிகளில் உள்ள டிபாசிட் மற்றும் அவை வழங்கிய கடன் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது. வழங்கப்பட்ட கட்டிட அனுமதிகளின் எண்ணிக்கை, ஏற்றுமதி/இறக்குமதி விலைகள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, எஸ்&பி குளோபல் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்குது. டவுனு: இந்த வாரமும் முக்கிய டேட்டா வெளியீடுகள் ஏதும் இல்லாத மாதிரி இருக்குது. நியுட்ரன்: 24214/24063/ 23927 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24569/24773/24908 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 24,418தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும். அப்பு: அடப்போங்க. சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ்க்கு இரண்டு வாரம் லீவு விட்டுடலாம் போலத்தான் இருக்குது. டவுனு வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு சொல்லுங்க. கேப்போம். நியுட்ரன்: கொஞ்சம் கருணை காட்டுங்க டவுனு. டவுனு: போனவாரம் ஒன்றை மட்டும் கட்டாயம் உணர்த்துச்சு. பொதுவா சந்தை பலவீனமா இருக்குதுங்கறதுதான் அது. நியுட்ரன்: ஆனா பல பங்குகள் விலை ஏறியிருக்கே. அப்பு: நானும் அதை கவனிச்சேன். நியுட்ரன்: அப்புறம் எப்படி பலவீனமுன்னு சொல்றீங்க. அப்பு: பேசாம இருங்க நியுட்ரன். டவுனு அடிச்சு ஆடி பலவீனப்படுத்திடப்போறாரு. டவுனு: சிறிய திருத்தம். பல பங்குகள் இல்லை. சில பங்குகள் விலை ஏறியிருக்கு. ஒட்டுமொத்தமா பார்த்தா பலவீனம்தான் தெரியுது. நியுட்ரன்: அப்ப நிப்டி ஏறாம சந்தை பெரிய அளவில ஏறாதுங்கிறீங்க. அப்பு: அதுவேணா சரிதான். நியுட்ரன்: நிப்டி ஒரு லெவல்ல வந்து சிக்கிக்கிட்ட மாதிரியில்ல நடந்துக்குது. டவுனு: அதனாலதான் நான் பலவீனமுன்னு சொல்றேன். ஒரு இடத்துல பெரிய மாற்றம் இல்லாம தொடர்ந்து நிறைவடையிறது பலவீனத்தைத்தான் காட்டுது. நியுட்ரன்: என் அனு பவத்துல இதை நான் பல முறை பார்த்திருக்கேன். டவுனு: அப்புறம். வேறென்ன உங்க அனுபவ பாடம் சொல்லுது. சொல்லுங்க கேட்டுக்கிறோம். நியுட்ரன்: தெளிவா நான் சொன்னதை பாருங்க. பாத்திருக்கேன். பாடம் படிப்பதெல்லாம் வியாபாரம் பண்றவங்கதான். வேடிக்கை என் வாடிக்கை. அப்பு: சே! என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம். நியுட்ரன்: சரி விடுங்க. வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு கட் அண்டு ரைட்டா சொல்லுங்க. அப்பு: அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாத சூழல்தான் நிலவுது. நியுட்ரன்: அப்ப நான் என்னதான் பண்றது. டவுனு: நடக்கறதை வேடிக்கை பார்க்கறதுன்னு சொன்னா வருத்தப்படுவீங்க. பலவீனம் சரியாகனுமுன்னா செய்திகள் பாசிட்டிவ்வா வரணும். அதனால செய்திகளை வாட்ச் பண்ணுங்க. நியுட்ரன்: இதைத்தான் சார் நான் கேட்டேன். இதைப்பாருங்கன்னு சொன்னா நான் பாட்டுக்கு வேடிக்கை பார்க்கப்போறேன். அட! சேம் சைடு கோல் போட்டுட்டேனோ? அப்பு: இப்படித்தாங்க சந்தையும் குழப்பத்துல இருக்குது. டவுனு: அதனாலதான் சொல்றேன் வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம். ஆனா இறக்கத்தை நோக்கியதாக அது இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். அப்பு: இறங்குனா உங்களுக்கு சாதகம்தானே. அதனால எங்களுக்கு கேக் வாங்கி கொடுங்க. டவுனு: இது என்ன புது கோரிக்கையா இருக்குது. வாங்க வாங்கித்தாறேன் என்று சொல்ல மூவரும் கேக் ஷாப்பை நோக்கி நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை