மேலும் செய்திகள்
தங்கம் சவரன் விலை லட்சத்தை நோக்கி! உயர்கிறது
18-Oct-2025
பின்டெக் நிறுவனமான பேடிஎம், தங்கள் பயனர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் தங்கள் தளம் வாயிலாக, மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு, வழங்கப்படும் வெகுமதி புள்ளிகளை கொண்டு தங்க நாணயங்களை பெறலாம் என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, பேடிஎம் தளத்தில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ஒரு தங்கப்புள்ளி வழங்கப்படும்; ரூபே கார்டு மூலம் செலவு செய்தால், 2 புள்ளிகள் கிடைக்கும். 100 தங்கப் புள்ளிகள் சேர்த்தால் ஒரு ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் தங்கம் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார். பேடிஎம் அறிவிப்பின் படி, ஒரு கிராம் டிஜிட்டல் தங்கம் கிடைக்க வேண்டுமென்றால், நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டியதிருக்கும் என ஒரு கணக்கு போட்டால் தலையே சுற்றுகிறது. நேற்றைய தேதி நிலவரப்படி, ஒரு கிராம் டிஜிட்டல் தங்கத்தின் விலை 12,400 ரூபாய் எனும் அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு கிராம் தங்கம் வாங்க, நாம் கிட்டத்தட்ட 1.24 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியதிருக்கும். இதுவே 'ரூபே'வை பயன்படுத்தி செலவழித்தால், 62 லட்சம் ரூபாய் செலவு செய்தால் தான் கிடைக்கும்.
18-Oct-2025