உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வீடு வாங்கும் திறன் அதிகரிப்பு

 வீடு வாங்கும் திறன் அதிகரிப்பு

நடப்பாண்டில், நம் நாட்டின் எட்டு பெருநகரங்களில், டில்லி தவிர ஏழு நகரங்களில், குடும்பத்தின் வீடு வாங்கும் திறன் கணிசமாக அதிகரித்துள்ளதாக 'நைட் பிராங்க் இந்தியா அபோர்ட பிளிட்டி இண்டெக்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறைந்த வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள், மக்களின் வருமானம் உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வர்த்தக தலைநகரான மும்பையில், ஒருவரின் வருமானத்தில் வீட்டுக் கடனுக்கான மாதத்தவணை தொகை 47 சதவீதமாக உள்ளது. எனினும், இது கடந்த 15 ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்தபட்ச சதவீதமாகும். இது கடந்த ஆண்டு 50 சதவீதமாக பதிவாகி இருந்தது.சென்னையை பொறுத்தவரை கடந்த 2010ல் வருமானத்தில் வீட்டுக்கடன் தவணை தொகை 51 சதவீதமாக இருந்த நிலையில், 2025ல் 23 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, குறைவான சதவீதம் என்பது, கடன் வட்டி குறைந்த அளவைவிட வருவாய் அதிகரித்தது என்பதை காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை