உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஜப்பான் பக்கம் திரும்பும் சர்வதேச முதலீட்டாளர்கள்

ஜப்பான் பக்கம் திரும்பும் சர்வதேச முதலீட்டாளர்கள்

சனே டகாய்ச்சி தலைமையிலான ஜப்பானின் புதிய அரசின் பொருளாதார சீர்திருத்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து, சர்வதேச முதலீட்டாளர்கள், அந்நாட்டு பங்கு மற்றும் பத்திர சந்தைகளின் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளனர்.

சாதகம்

 ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகாய்ச்சி, அரசின் செலவுகளை அதிகரிப்பது, வரி குறைப்பு, குறைந்த வட்டி விகிதம் மற்றும் புதிய முதலீடுகள் உள்ளிட்ட பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பல திட்டங்களை அறிவித்துள்ளார். இது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது, ஜப்பானிய பங்குகள் மலிவான விலையில் கிடைக்கின்றன  முதலீட்டாளர்கள் அதிக விலை கொண்ட அமெரிக்க சந்தையில் இருந்து முதலீடுகளை ஜப்பானுக்கு மாற்ற துவங்கி உள்ளனர்.  புதிய பிரதமர் தேர்தலுக்கு முன்னதாகவே, அன்னிய முதலீட்டாளர்கள், ஜப்பானிய பங்குகளில் 2.54 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

பாதகம்

 ஜப்பானிய யென் மதிப்பு சரிந்து வருவது  ஆளும் அரசின் கூட்டணி கட்சியான இஷின் மற்றும் புதிய நிதியமைச்சர் சட்சுகி கடயாமா ஆகியோரால் சில கொள்கைகள் மாறலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி