உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தடையின்றி வர்த்தகம் செய்ய குரோ லைட் அறிமுகம்

 தடையின்றி வர்த்தகம் செய்ய குரோ லைட் அறிமுகம்

ப ங்கு வர்த்தகத்தின் இடையே, தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது இணைய முடக்கத்தின்போது, முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 'குரோ லைட்' என்ற அவசரகால வர்த்தக இணையதளத்தை, ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனமான 'குரோ' துவங்கியுள்ளது. பங்கு வர்த்தகத்தின்போது தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது 'அவுட்டேஜ்' ஏற்படும்போது, முதலீட்டாளர்கள் தங்களின் 'ஓப்பன் பொசிஷனை' முடிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்நிலையில், குரோ உருவாக்கியுள்ள புதிய தளம், மற்ற கிளவுட் சேவைகளை சார்ந்து இருக்காமல், தனியான ஒரு கட்டமைப்புடன் இயங்கும். எனவே, மெயின் தளத்தில் கோளாறு ஏற்பட்டாலும், இது தொடர்ந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குரோ லைட், மொபைல் மற்றும் கணினி ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி