புரிந்துகொண்ட பிறகே முதலீடு செய்ய வேண்டும்
எந்த ஒரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன், அதை பற்றி தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்து, ரிஸ்க் காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மூலதன சந்தைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும். சந்தை பங்கேற்பாளர்கள் ஏ.ஐ., பயன்படுத்துவதால், முதலீட்டாளர்களின் நலன் மற்றும் சந்தையின் பாதுகாப்பில் சமரசம் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்.துஹின் காந்தா பாண்டே,தலைவர், செபி