உள்ளூர் செய்திகள்

ஐ.பி.ஓ.,

டாடா கேப்பிடல்

டா டா குழுமத்தின் நிதி மற்றும் முதலீட்டு சேவை பிரிவான 'டாடா கேப்பிடல்',17,200 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முதலீட்டாளர்கள் வசமுள்ள 26.58 கோடி பங்குகள், 21 கோடி புதிய பங்குகள் என 47.58 கோடி பங்குகளின் விற்பனை வாயிலாக, முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. அக்.6 - 8ம் தேதி வரை, முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டு ஹூண்டாய் மோட்டார் 27,870 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வந்ததற்கு பின், நடப்பாண்டில் வரும் மிகப்பெரிய ஐ.பி.ஓ., இதுவாகும்.

ரோட்டோமேக் எனர்டெக்

குஜராத்தைச் சேர்ந்த 'ரோட்டோமேக் எனர்டெக்', 500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு விண்ணப்பித்து உள்ளது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளரான மொரீசியஸைச் சேர்ந்த 'பான்யான் ட்ரீ குரோத் கேப்பிடல், 2.40 கோடி பங்குகளை சந்தையில் விற்க உள்ளது. பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் டி.சி., மோட்டார், சோலார் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் தொகையை நடைமுறை மூலதன செலவினம் மற்றும் நிறுவனத்தின் பிற செலவுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக, ரோட்டோமேக் எனர்டெக் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை