உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / IPO அலசல்: கிளீன் மேக்ஸ்

IPO அலசல்: கிளீன் மேக்ஸ்

கடந்த 2010ல் மும்பையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட 'கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொல்யூஷன்ஸ்' நிறுவனம், வணிக மற்றும் தொழில்துறையினருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்குகிறது. அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, 2.80 கிகாவாட் அளவிலான மின்சார உற்பத்தி செயல்பாட்டில் உள்ள திறனும், 3.17 கிகா வாட் அளவிலான ஒப்பந்தம் செய்யப்பட்ட திறனும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகால அனுபவத்துடன், தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறைகள் முதல் உள்கட்டமைப்பு, சிமென்ட், ஸ்டீல் போன்ற பல்வேறு துறைகளுக்கு 'நெட் ஜீரோ' மற்றும் கார்பன் குறைப்பு தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்களுக்கான மின் ஒப்பந்தம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேவைகளையும் வழங்குகிறது இந்த நிறுவனம். ஆரம்ப தேதி : 23.02.2026 நிறைவு தேதி: 25.02.2026 பட்டியலிடப்படும் சந்தைகள்: என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ - நாள்: 02.03.2026 (உத்தேசமாக) திரட்டப்படும் தொகை : ரூ. 3,100.00 கோடி புதிய பங்குகள் வெளியீடு: ரூ. 1,200 கோடி ஆபர் பார் சேல்: ரூ. 1,900 கோடி (அதிக பட்ச அளவு ரூபாயில்) முக மதிப்பு: ரூ.1/- விலை வரம்பு: ரூ.1,000 முதல் ரூ.1,053 வரை விண்ணப்பிக்க குறைந்த பட்ச அளவு: எண்ணிக்கை: 14 பங்குகள் தொகை: ரூ. 14,000

சிறப்பம்சங்கள்

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகால அனுபவம். *திட்டங்களை உருவாக்குதல் முதல் மின் விற்பனை வரையிலான ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறனை கொண்டிருப்பது. * நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்துகொண்டிருப்பதன் வாயிலாக ஓரளவுக்கு நிலையான வருமானம் கொண்டிருத்தல். *சூரிய சக்தி, காற்றாலை மற்றும் ஹைபிரிட் என பலவேறு தரப்பட்ட திட்டங்களை கொண்டு இயங்குதல்.

ரிஸ்க்குகள்

* அதிக கடன் சுமை மற்றும் சீரற்ற பணப்புழக்கமும் நிதி ஸ்திரத்தன்மை பாதிக்கலாம். * துறை ரீதியாக மாறிவருகின்ற/மாறக்கூடிய அரசாங்க விதிமுறைகளை சார்ந்திருக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பது. * வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலுவை தொகையை வசூலிக்க கால தாமதமாகுதல் அல்லது வசூலிக்க முடியாமல் போதல் * திட்டங்களை செயல்படுத்துவதன் அங்கமான நிலம் கையகப்படுத்துதல், ஒப்புதல்கள் மற்றும் கிரிட்டுடன் இணைப்பை பெறுவதில் உள்ள சிக்கல்கள். * வானிலையில் ஏற்படும் மாற்றங்களால் மின் உற்பத்தியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள். * நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் ஒரு சில நிறுவனர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது. கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை