UPDATED : ஜூலை 23, 2026 03:09 AM | ADDED : ஜூலை 23, 2026 03:00 AM
உலகளவில் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் உற்பத்திக்கான இயந்திரங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், கடந்த 2024ம் ஆண்டில் உலக ராபியா இயந்திர சந்தையில் 15.40 சதவீத பங்கையும், 2025ம் நிதியாண்டில் இந்தியாவில் 40.70 சதவீத சந்தை பங்கையும் பெற்று முன்னணியில் உள்ளது. திட்டமிடல் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது வரை முழுமையான தீர்வுகளை வழங்குவதுடன், இந்தியாவில் 4, அமெரிக்காவில் 1, இத்தாலியில் 1 என மொத்தம் 6 உற்பத்தி நிலையங்களை இயக்குகிறது.
சிறப்பம்சங்கள்* 5 நாடுகளில் விற்பனை அலுவலகங்களை கொண்டு செயல்படுகிறது* டெக்னிக்கல் டெக்ஸ்டைல் துறைக்கான பல்வேறு இயந்திரங்களை தயாரிப்பது* உலகம் முழுதும் இந்நிறுவனத்தின் 2,300க்கும் மேற்பட்ட 'டேப் எக்ஸ்ட்ரூஷன் லைன்'கள் உள்ளன* காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் வாயிலாக வலுவான அறிவுசார் சொத்துரிமையை கொண்டிருப்பது* உயர்தர இயந்திரங்களை வழங்குவதில் நீண்டகால அனுபவமும் நற்பெயரும் கொண்டிருப்பது* இந்தியாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட 56 காப்புரிமைகளை கொண்டுள்ளது• முன்னணி நிறுவனங்களுடன் நீண்டகால வணிக தொடர்பு* 'பாலிபுரோப்பிலீன், உயர் அடர்த்தி பாலிஎத்திலீனால்' துணி நெய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ளது.இடர்கள்* பேக்கேஜிங் துறையை அதிகம் சார்ந்திருப்பது*மூலப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களால் லாபத்தின் அளவு பாதிக்கப்பட வாய்ப்பு* உள்ளூர், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வது* உலக வர்த்தக கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களால் வணிகம் பாதிக்கப்படுவது* சில சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார மற்றும் நிதி சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கம்* வினியோக தொடரில் ஏற்படும் தடங்கல்களால் உற்பத்தி மற்றும் வினியோகம் பாதிக்கப்படுவது* உலகளாவிய விலைவாசி உயர்வின் தாக்கத்தால் செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பது* பல்வேறு நாடுகளின் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுவதில் ஏற்படக்கூடிய சிரமங்கள்* பேக்கேஜிங் அல்லாத துறைகளை சேர்ந்த நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக ஈர்ப்பதில் சிரமங்கள் ஏற்படக்கூடும்.கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்.