உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ., அலசல்: ஷேடோபேக்ஸ் டெக்னாலஜிஸ்

ஐ.பி.ஓ., அலசல்: ஷேடோபேக்ஸ் டெக்னாலஜிஸ்

கடந்த 2015-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், கணினி தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தி செயல்படும் மூன்றாம் தரப்பு 'லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனமாகும். இ-காமர்ஸ், க்விக் காமர்ஸ், புட் மார்க்கெட்பிளேஸ் மற்றும் கோரிக்கைக்கேற்ப சேவையளிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, இந்தியாவின் 14,758 பின்கோடுகளை உள்ளடக்கிய ஊர்களுக்கான டெலிவரி சேவைகளை வழங்கி வருகிறது.

சிறப்பம்சங்கள்

* கிக் - பணியாளர்களை சார்ந்த பெரியதொரு 'டெலிவரி பார்ட்னர்' நிறுவனம்* வாடிக்கையாளர் தேவைக்கு இணங்க மாற்றியமைக்கும் படியான சேவைகளை வழங்கக்கூடிய தளம்* விரிவான, விரிவாக்கக்கூடிய மற்றும் மூலதனசார்பு குறைவான அளவிலான நாடுதழுவிய வினியோகத்துக்கான வலையமைப்பை கொண்டிருப்பது* முன்னணி டிஜிட்டல் காமர்ஸ் தளங்களுடன் நல்ல வணிக உறவு* இ-காமர்ஸ் மற்றும் க்விக் காமர்ஸ் பிரிவால் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு.

ரிஸ்க்குகள்

* சமீபத்திய லாபம் தவிர்த்து, நஷ்டத்தை கண்டிருக்கும் வரலாற்றை கொண்டிருப்பது* கிக் - பணியாளர்களை அதிக அளவில் சார்ந்திருப்பது* பழைய, புதிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களிடம் இருந்து போட்டியை எதிர்கொள்ள வாய்ப்பு* எதிர்காலத்தில் வரக்கூடிய கிக் - பணியாளர்கள் சார்ந்த சட்டதிட்ட மாற்றங்கள்* கடுமையான போட்டி உருவானால் லாபம் குறைய வாய்ப்பு* வேகமான வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ