உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ.,: செடிமாக் மெகாட்ரானிக்ஸ்

ஐ.பி.ஓ.,: செடிமாக் மெகாட்ரானிக்ஸ்

'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்'

வா கன உதிரிபாகங்கள் மற்றும் இன்ஜின் கட்டுப்பாட்டு கருவிகளை தயாரிக்கும் நிறுவனமான 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்' நிறுவனம் ஆபர் பார் சேல் வாயிலாக 1,087 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளது. பங்கு விலை : ரூ.1,287 - -- 1,352 வரை ஆரம்ப தேதி : மார்ச் 4 முடியும் தேதி : மார்ச் 6 குறைந்தபட்ச முதலீடு : ரூ.14,872 (11 பங்கு) பட்டியலிடப்படும் தேதி : மார்ச் 11 என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.எப்.எஸ்., விற்பனை : நிறுவனத்தின் நிறுவனர்களான மனிஷ் சர்மா, அஸ்வினி அமித் தீட்சித் மற்றும் முதலீட்டாளர்களான, 'ஹெச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ், ஏ91 எமர்ஜிங் பண்டு' உள்ளிட்டோர் தங்களது 80.43 லட்சம் பங்குகளை விற்பனை செய்கின்றனர். யார் யாருக்கு : தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு 50 சதவீதம்; சிறு முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதம்; நிறுவனம் சாரா முதலீட்டாளர்களுக்கு 15 சதவீதம் என பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !