| ADDED : டிச 06, 2025 01:17 AM
பார்க் மெடி வேர்ல்டு
பங்கு விலை நிர்ணயம்
ஹரியானாவை தலைமையிடமாக கொண்டு, வட மாநிலங்களில் 13க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நடத்தி வரும், 'பார்க் மெடி வேர்ல்டு' 920 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது. இதில், புதிய பங்கு விற்பனை வாயிலாக 770 கோடி ரூபாயும்; பங்குதாரர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 150 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு ஒன்றின் விலை 154 - 162 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள், வரும் 10 முதல் 12ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். 17ம் தேதி சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. மீஷோ, அக்கஸ், வித்யா
சந்தையில் வரவேற்பு
பு திய பங்கு வெளியீடுக்கு வந்த -'மீஷோ, அக்கஸ், வித்யா ஒயர்ஸ்' நிறுவனங்களின் பங்குகளுக்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்றுடன் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவடைந்த நிலையில், மீஷோ பங்குகளுக்கு 82 மடங்கும்; அக்கஸ் பங்குகளுக்கு 104 மடங்கும்; வித்யா ஒயர்ஸ் பங்குகளுக்கு 28 மடங்கும் விண்ணப்பங்கள் குவிந்தன. தேவை அதிகரிப்பால், கிரே சந்தையில், இந்நிறுவன பங்குகளின் விலை, கணிசமான உயர்வை கண்டன. வரும் 10ம் தேதி, மூன்று நிறுவனங்களும் பட்டியலிடப்பட உள்ளன.