உள்ளூர் செய்திகள்

ஐ.பி.ஓ.,

‘அட்வான்ஸ்டு சிஸ்டெக்’ நிறுவனத்துக்கு அனுமதி தொழில்துறை நிறுவனங்களுக்கு ‘ஆட்டோமேஷன்’ சேவைகளை வழங்கி வரும் ‘அட்வான்ஸ்டு சிஸ்டெக்’ நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு செபி ஒப்புதல் வழங்கிஉள்ளது. இந்நிறுவனம், கடந்த ஜூலை மாதம் செபியிடம் விண்ணப்பித்தது. புதிய பங்கு வெளியீடு வாயிலாக 98 கோடி ரூபாய் திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. தவிர, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் கிட்டத்தட்ட 26 லட்சம் பங்குகளை விற்க உள்ளனர். ‘மெகாநெட் டெக்னாலஜிஸ்’ ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பம் மும்பையைச் சேர்ந்த ‘மெகாநெட் டெக்னாலஜிஸ்’ நிறுவனம் 740 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.பி.ஓ.,வை வெளியிடுவதற்கு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம் ஏ.ஐ., சர்வர்கள், தரவு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் உட்பட ஏ.ஐ., துறைக்கு தேவையான உட்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் சார்ந்த சேவைகளை வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !