உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / நீண்ட கால முதலீடுகள் தனிப்பங்குகளில் செய்வது சரியா?

நீண்ட கால முதலீடுகள் தனிப்பங்குகளில் செய்வது சரியா?

பொ துவாக, நீண்ட கால முதலீடு என்றால் கண்டிப்பாக லாபகரமாக இருக்கும் எனும் பொதுவான கருத்து சந்தையில் நிலவுவதை நாம் அறிவோம். ஆனால் யதார்த்தத்தில், நேரடியாக தனித்தனி பங்குகளில் முதலீடு செய்வதில், ஒரு சில எதிர்பாராத சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளவேண்டி இருக்கலாம். ஐந்து ஆண்டு காலம் முதலீடு செய்தாலும்கூட, பெரிய அளவில் லாபம் காண முடியாத சூழல் ஏற்படலாம். பின்வரும் பங்குகள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் சந்தித்த விலை மாற்றத்தைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். நிறுவனங்களின் செயல்பாடு மட்டும் போதாது; அவை இயங்கும் துறைகளின் சூழல் ஆதரவாக இல்லாது போனால், ஐந்து ஆண்டு காலத்தில் கூட பெரிய அளவிலான விலை மாறுதல்கள் வந்துவிடாது. எனவேதான், தனியொரு பங்கில் முதலீடு செய்யாமல், 'டைவர்சிபை' செய்து, பல்வேறு விதமான பங்குகளில் நாம் முதலீடு செய்யவேண்டும் என்கிறார்கள் வல்லுனர்கள். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த பங்குகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவிலான விலை மாற்றம் இல்லாவிட்டாலும்கூட, இவற்றின் 'பி/இ ரேஷியோ' அதிகமாகவே இருப்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி