உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஜெப்ரீஸ் அறிக்கையால் ஐ.டி., சரிவு!

 ஜெப்ரீஸ் அறிக்கையால் ஐ.டி., சரிவு!

ஏ . ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியால் ஐ.டி., துறையின் வருவாய் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என சர்வதேச தரகு நிறுவனமான 'ஜெப்ரீஸ்' எச்சரித்ததால், இத்துறை பங்குகள் நேற்று சரிவைக் கண்டன. குறிப்பாக 'நிப்டி ஐ.டி.,' குறியீடு கிட்டத்தட்ட 1.50 சதவீதம் வரை சரிந்து 31,550 என்ற நிலையில் நிறைவு செய்தது. 'இன்போசிஸ், ஹெச்.சி.எல்., டெக் மற்றும் எம்பசிஸ் ஆகிய பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தக்கவைத்து கொள்ளலாம். டி.சி.எஸ்., எல்.டி.ஐ., மைண்ட்ரீ பங்குகளில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். 'கோபோர்ஜ், சஜிலிட்டி மற்றும் ஐ.கே.எஸ்., ஹெல்த் ஆகிய நிறுவனங்கள் மட்டும் தற்போதைய சூழலில் ஓரளவு சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது' என ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !