ஏற்றம் திரும்பினாலும் அதன் வேகம் குறையலாம்
நிப்டி 25,227 என்ற அளவில் நிறைவடைந்துள்ளது. முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நீடித்தாலும், குறுகிய கால 9 நாள் சராசரி (இ.எம்.ஏ.,) மற்றும் 50 நாள் சராசரி (எஸ்.எம்.ஏ.,) ஆகியவற்றில் தட்டையான நிலை உருவெடுத்துள்ளது. இது ஏற்றத்தின் வேகம் குறைவதை காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ., அதிகமாக இருப்பது, சந்தை குறுகிய காலத்தில் அதிகம் ஏறியிருப்பதை காட்டுகிறது. ஆர்.ஓ.சி., இன்னும் ஏற்றத்தை காட்டினாலும், அதன் வேகம் குறைந்துள்ளது. ஸ்டோக்காஸ்டிக் குறியீடுகளும் குறுகிய கால மொமென்டம் வலுவிழப்பதை காட்டுகின்றன. அதேநேரம், எம்.ஏ.சி.டி., ஏற்றத்துக்கு ஆதரவாக உள்ளது. ஏ.டி.எக்ஸ்., தற்போதைய டிரெண்டு வலுவாக இருப்பதை உணர்த்துகிறது. ஓ.பி.வி., அளவீடும் ஏற்றப்போக்குக்கு ஆதரவாக உள்ளது. இருப்பினும், ஏற்றத்தின் வேகம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நகரவோ அல்லது சந்தையில் லாபத்தை வெளியே எடுப்பதற்காக செய்யப்படும் விற்பனை அதிகரிக்கவோ வாய்ப்புள்ளது. மொத்தத்தில், ஏற்றம் திரும்பினாலும், அதன் வேகம் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள் நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 18.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்அரவிந்த் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-1.92 ஆர்.ஓ.சி., :4.16 ஆர்.எஸ்.ஐ., :53.91) | 518.60 | 515 | 509 | 524 | 2, 5, 6பயோகான் (எம்.ஏ.சி.டி.,(12,26) :1.15 ஆர்.ஓ.சி., :2.04 ஆர்.எஸ்.ஐ., :52.07) | 361.95 | 357 | 351 | 368 | 5சி.எஸ்.பி., பேங்க் (எம்.ஏ.சி.டி.,(12,26) :2.31 ஆர்.ஓ.சி., :12.69 ஆர்.எஸ்.ஐ., :65.78) | 332.50 | 328 | 322 | 339 | 1, 2, 4, 5இ.ஐ.ஹெச்., (எம்.ஏ.சி.டி.,(12,26) :4.55 ஆர்.ஓ.சி., :6.56 ஆர்.எஸ்.ஐ., :59.93) | 312.95 | 308 | 302 | 321 | 2, 4, 5எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-0.58 ஆர்.ஓ.சி., :15.04 ஆர்.எஸ்.ஐ., :57.23) | 388.70 | 386 | 381 | 394 | 2, 5டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள் 1.5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு 2. 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு 3.நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு4.5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு 5.10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு 6.5 நாளில் விலை அதிகரிப்பு ஆர்.எஸ்.ஐ., அதிகமாக இருப்பது, சந்தை குறுகிய காலத்தில் அதிகம் ஏறியிருப்பதை காட்டுகிறது