உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சவால்களை தாண்டி வளரும் ஜுவல்லரி துறை

 சவால்களை தாண்டி வளரும் ஜுவல்லரி துறை

திருமண சீசனும், பண்டிகை காலமும் 'ஜுவல்லரி' துறையின் குறுகிய கால வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்று 'நுவாமா ரிசர்ச்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறியதாவது:  தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தாலும், மார்ச் காலாண்டில் நகைகளுக்கான டிமாண்டு தொடர்ந்து நிலையாகவே இருந்துள்ளது  ஜுவல்லரி நிறுவனங்கள் வலுவான வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன  ஜூன் காலாண்டிலும் இதே போக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  திருமண சீசன், பண்டிகை காலங்களில் தொடர்ச்சியாகவே நகைகளுக்கு டிமாண்டு இருந்துள்ளது  மக்கள் எடை குறைவான 'லைட்வெயிட்' நகைகளை விரும்புகின்றனர். பட்ஜெட்டை சமாளிக்க, 9 காரட், 14 காரட், 18 காரட் போன்ற காரட் குறைவான நகைகளையும் வாங்குகின்றனர்  முதலீட்டு நோக்கில் தங்க கட்டிகளையும், நாணயங்களையும் வாங்குகின்றனர்  திருமணங்களுக்கு உகந்ததில்லை என்று கருதப்படும் மாதமும், தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருப்பதும் இத்துறைக்கான சவால்கள்  சவால்கள் இருந்தாலும் கூட, ஜுவல்லரி துறைக்கு சாதகமான சூழலே உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை