உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஜியோ பிளாக்ராக் நிறுவனத்தின் பிளெக்சி கேப் பண்டு அறிமுகம்

ஜியோ பிளாக்ராக் நிறுவனத்தின் பிளெக்சி கேப் பண்டு அறிமுகம்

'ஜி யோ பிளாக்ராக் அசெட் மேனஜ்மென்ட்' நிறுவனம், 'ஜியோ பிளாக்ராக் பிளெக்சி கேப் பண்டு' என்ற ஈக்விட்டி திட்டத்தை துவக்கியுள்ளது. நிறுவனத்தின் சி.இ.ஓ., சித்தார்த் சுவாமிநாதன் கூறியதாவது: இத்திட்டம், பிளாக்ராக்கின் தனித்துவமான, 'சிஸ்டமேட்டிக் ஆக்டிவ் ஈக்விட்டீஸ்' தொழில்நுட்பத்துடன் செயல்படும். இது, பிக் டேட்டா, நவீன பகுப்பாய்வு முறை, நிதி நிபுணர்களின் பங்களிப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து பயன்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு தனித்துவமான மற்றும் சாத்தியமுள்ள குறைந்த செலவிலான சிறந்த முத லீட்டு தீர்வை வழங்குகிறது. ஜியோ பைனான்ஸ் செயலி போன்றவற்றில் குறைந்தது, 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். இது, வரும், 7ம் தேதியுடன் முடிவடைகிறது. முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடானது, 125 நிறுவன பங்கு வர்த்தகங்களில் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை