மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ.,
17-Sep-2025
தெ ன் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி., குழுமத்தின் இந்திய பிரிவான 'எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா'வின் புதிய பங்கு வெளியீடு வரும் 7ம் தேதி துவங்குகிறது. முதலீட்டாளர்கள் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாய் நிறுவனமான எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸின் 15 சதவீத பங்குகள் கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளன. மொத்தம் 10.18 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திரட்டப்படும் தொகை முழுதும் தென் கொரியாவில் உள்ள குழுமத்துக்கே சென்று சேரும். இதற்கு முன் இந்திய பங்குச் சந்தைகளில் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் பட்டியலிடப்பட்டது. அதன் பின் இரண்டாவதாக இப்போது எல்.ஜி., பட்டியலிடப்பட உள்ளது. எல்.ஜி., இந்தியா, பங்கு வெளியிடுவதற்கு கடந்த மார்ச் மாதமே செபியிடம் அனுமதி பெற்றிருந்தது.
17-Sep-2025