சந்தை துளிகள்
ஓராண்டு உச்சத்தில் 'வோடபோன் ஐடியா' 'வோ டபோன் ஐடியா' நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் மே 16ம் தேதி நடைபெறுகிறது. அதில், நிதிநிலை முடிவுகள் பற்றியும், பங்குகளையோ, முன்னுரிமை அடிப்படையில் 'வாரண்ட்'டுகளையோ வெளியிட்டு மூலதனம் திரட்டுவது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின், நேற்று பங்கு விலை கிட்டத்தட்ட 9 சதவீதம் உயர்ந்து 12.96 ரூபாய் என்ற 52 வார உச்சத்தை தொட்டுள்ளது. வர்த்தக முடிவில் இதன் பங்கு விலை 12.76 ரூபாயாக இருந்தது.