போரை நிறுத்திய டிரம்ப் சந்தைகள் அடித்தன ஜம்ப்
சர்வதேச சூழலில் நிலவும் சாதகமான மாற்றங்களால், இந்திய பங்குச் சந்தைகள் 5வது நாளாக நேற்று மிகப்பெரிய எழுச்சியை கண்டன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரு குறியீடுகளும், 4 சதவீதம் வரை உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன.
ஏற்றத்துக்கான காரணங்கள்
* இரண்டு வார போர் நிறுத்த அறிவிப்பு * கச்சா எண்ணெய் விலை பேரல் 94.27 டாலராக வீழ்ச்சி * ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யாதது * ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 52 காசுகள் உயர்ந்தது * ஆசிய, ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தின் எதிரொலி * உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவு.