உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இரண்டு காலாண்டுகளுக்கு குறைவாக செயல்படலாம்

இரண்டு காலாண்டுகளுக்கு குறைவாக செயல்படலாம்

இந்திய சந்தைகள் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு, உலகளாவிய சந்தைகளை விட குறைவாகச் செயல்படலாம். ஆனால், அதன்பிறகு நிலைமைக்கு வந்து, நீண்ட கால வளர்ச்சிப் பாதையை மீண்டும் தொடர வேண்டும். இதற்கு முன்னர் இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை நல்ல முன்னேற்றம் இருந்ததால், பங்கு மதிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டன. அதனால் மேலும் ஒரு திருத்தம் அவசியமானது. ஆரம்பத் திருத்தம் சுமார் 15 சதவீதமாக இருந்தது. ஆனால், வலுவான எஸ்.ஐ.பி., வரவுகள், வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியதால், அது கட்டுப்படுத்தப்பட்டது. இதன்பிறகு, சந்தைகள் பக்கவாட்டில் நகர்ந்து, ஒருங்கிணைந்து வருகின்றன. அண்மைக் காலாண்டுகளில் வருவாய் வளர்ச்சி மெதுவாக இருந்தது. ஆனால் சமீபத்தில், வருவாய் தரம் உயர்வது அதிகமாக உள்ளது. இன்னும் ஒரு காலாண்டு அல்லது இரண்டு காலாண்டுகளில், வருவாயும் அடிப்படைகளும் மீண்டு வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். -ரிஷி கோலி தலைமை முதலீட்டு அதிகாரி, ஜியோ பிளாக்ராக் ஏ.எம்.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ