உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மொபைல் கடன் செயலிகள்

மொபைல் கடன் செயலிகள்

யா ரிடமும் போய் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு கையேந்தி கைமாறு கேட்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்பதாலோ என்னவோ, இந்தியாவில் மொபைல் போன் செயலிகள் வாயிலாக, சிறு கடன்களை பெறுவது அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த செயலிகள் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. நன்மைகள்  தயக்கம் ஏதுமின்றி கோரலாம்  உடனடியாக கடன் பெற முடியும்  கடன் பெறுவதற்கு எளிமையான நடைமுறைகள்  சில ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள் வரை பெறலாம். ஆபத்துகள்  வங்கிகளைக் காட்டிலும் அதிக வட்டி  மிரட்டல் மற்றும் துன்புறுத்தும் வாய்ப்பு  தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்பு  கடன் தருவதாக கூறி பணம் பறிக்கும் போலி செயலிகள். கவனிக்க வேண்டியவை  செயலி, ரிசர்வ் வங்கி அல்லது இந்திய நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும்  செயலியில் உள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படித்து பார்க்கவும்  அதிக வட்டி மற்றும் மறைமுக கட்டணங்கள் உள்ளதா என சரிபார்க்கவும்  தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறை செயலியில் உள்ளதா என பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை