நிப்டியை விட அதிக வருவாய் கொடுத்த மியூச்சுவல் பண்டுகள்
க டந்த நிதியாண்டின் 4வது காலாண்டில், கிட்டத்தட்ட 72 சதவீத மியூச்சுவல் பண்டு திட்டங்கள், 'நிப்டி 50 டி.ஆர்.ஐ.,' குறியீட்டை விட அதிக வருவாய் தந்துள்ளதாக, 'வெஞ்சுரா செக்யூரிட்டீஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: * 354 திட்டங்களை ஆய்வு செய்ததில், கிட்டத்தட்ட 62 சதவீத திட்டங்கள் தங்களது பெஞ்ச்மார்க் குறியீட்டை விட கூடுதல் வருவாயை தந்துள்ளன * மியூச்சுவல் பண்டுகளில் முதலீட்டு வரவு 90,457 கோடி ரூபாயாக வலுவாக இருந்துள்ளது * கடந்த காலாண்டில், 'நிப்டி 50' குறியீடு 14.60 சதவீதமும், 'பி.எஸ்.இ., மிட்கேப்' குறியீடு 13.40 சதவீதமும், 'பி.எஸ்.இ., ஸ்மால்கேப்' குறியீடு 15.30 சதவீதமும் சரிவை சந்தித்தன. டாப் 5 நிறுவனங்கள் மொத்த திட்டங்கள் பெஞ்ச்மார்க்கை முந்திய சதவீதம் பி.பி.எப்.ஏ.எஸ்., மியூச்சுவல் பண்டு 2 100% ஹெச்.எஸ்.பி.சி., மியூச்சுவல் பண்டு 14 93% எடெல்வைஸ் 12 92% கோட்டக் 25 88% பிராங்க்ளின் டெம்பிள்டன் 14 83%