ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள்
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் எடுப்பது தொடர் பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவ்விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்திருக்கின்றன. புதிய விதிகள்
1 இலவச ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. தற்போது வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு அதிகபட்சமாக ஐந்து முறை ஏ.டி.எம்.,களில் இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இது பண பரிவர்த்தனை மட்டுமல்லாமல், ‘பேலன்ஸ்’ பார்ப்பது போன்ற மற்ற பணம்சாரா பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். மெட்ரோ நகரங்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கும், மெட்ரோ அல்லாத பகுதிகளில் ஐந்து பரிவர்த்தனைகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது. 2 ஒவ்வொரு ஏ.டி.எம்., இயந்திரமும் அமைந்திருப்பது மெட்ரோ பகுதியா அல்லது மெட்ரோ அல்லாத பகுதியா என்பதை வங்கிகள் தெளிவாக குறிப்பிட வேண்டும். 3 வாடிக்கையாளர்களுக்கு மீதமிருக்கும் இலவச ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, இலவச வரம்பை தாண்டிய பிறகு விதிக்கப்படும் கட்டணங்கள் ஆகிய விபரங்களை வங்கிகள் தவறாமல் தெரிவிக்க வேண்டும். 4 ஏ.டி.எம்.,களில் தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது பணம் கையிருப்பு இல்லாவிட்டால், பரி வர்த்தனை நிறைவேறாது. இப்படி, தவறிய பரிவர்த்தனை களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இவற்றுக்கு கட்டணமும் விதிக்கக் கூடாது.