என்.எப்.,ஓ., மியூச்சுவல் பண்டு
க்ரோ மல்டி அசெட் அலோகேஷன் பண்டு
க் ரோ மியூச்சுவல் பண்டு நிறுவனம், சந்தையில் க்ரோ மல்டி அசெட் அலோகேஷன் பண்டினை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் திரட்டப்படும் தொகை பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி போன்ற சொத்து வகைகளில் முதலீடு செய்யப்படும். ஏற்ற இறக்கங்களை குறைத்து, சந்தை நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வகையில் முதலீட்டாளர்களின் போர்ட்போலியோ இறுதி செய்யப்படும். பொருளாதார தரவுகள், சந்தை நிலவரம் மற்றும் டெக்னிக்கல் இண்டிகேட்டர் அடிப்படையில் முதலீடுகள் குறித்து முடிவெடுக்கப்படும். செப்.,24 வரை பண்டு திட்டத்தில் இணையலாம். டாடா நிப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் பண்டு
டா டா சொத்து மேலாண்மை நிறுவனம், 'டாடா நிப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ்' பண்டினை நேற்று அறிமுகம் செய்தது. புதிய பண்டு திட்டத்தில் சேர்வதற்கு, வரும் செப்., 26 வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். நிப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில், நிப்டி 100 குறியீட்டில், 51 முதல் 100 வரையிலான இடத்தை வகிக்கும் பங்குகள் இடம்பெறும். 15 லட்சம்
பரிவர்த்தனை
என்.எஸ்.இ.,யில்
புதிய சாதனை
தேசிய பங்குச் சந்தையின் மியூச்சுவல் பண்டு முதலீட்டு தளத்தில், கடந்த 10ம் தேதி, 15 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெற்று, புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் புதிய தளத்துக்கு மாறிய நிலையில், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பரிவர்த்தனை இதுவாகும்.இது டிஜிட்டல் நிதி தளங்களின் வேகமான வளர்ச்சியையும், அதன் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.