நிப்டி ஆல்பா 50 இண்டெக்ஸ்
'ஸ் டார் யூனியன் டாய்ச்சி' ஆயுள் காப்பீடு, 'எஸ்.யு.டி., லைப் நிப்டி ஆல்பா 50 இண்டெக்ஸ் யுலிப்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் இணைய, அக் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 300 முக்கிய பங்குகளில் (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன், மற்றும் சாராசரி டேர்ன் ஓவர் அடிப்படையில்) சிறந்த 50 பங்குகளை, ஆல்பா அடிப்படையில் தேர்ந்தெடுத்து கணக்கிடப்படுவது 'நிப்டி ஆல்பா 50' குறியீடு. ஆல்பா என்பது ஒரு சந்தையின் ஏற்றத்தை தாண்டி, ஒரு பங்கு எவ்வளவு லாபம் தருகிறது என்பதைக் குறிப்பதாகும். சந்தை 5 சதவீதம் ஏற்றமடையும் போது, பங்கு 8 சதவீதம் ஏற்றம் கண்டால், அந்தப் பங்கின் ஆல்பா 3 சதவீதம் ஆகும். இதில் திரட்டப்படும் பணமானது, நிப்டி ஆல்பா 50 குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படும்.