நிப்டி இந்தாண்டு இறுதியில் 28,000 புள்ளிகளை எட்டும் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கணிப்பு
இந்திய பங்கு சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், நிப்டி 28,080 புள்ளிகளாக உயரும் என 'ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ்' கணித்துள்ளது. இந்நிறுவனத்தின் கணிப்புகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்க வரி கொள்கைகளில் தளர்வு, தனியார் மூலதன செலவினங்களின் மீட்சி, தொழில்வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவை சந்தை மீட்சிக்கு உதவும். இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கான கட்டமைப்பு மாறாமல் உள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பில் உள்ள அழுத்தங்கள் போன்ற காரணங்களால், குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும்.