உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  நிப்டியின் ஏற்றம் தொடர வாய்ப்பு உள்ளது

 நிப்டியின் ஏற்றம் தொடர வாய்ப்பு உள்ளது

நிறுவனம் இறுதி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) எட்டர்னல் 251.35 7.55 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 777.45 5.00 டாடா ஸ்டீல் 197.50 -0.36 ஓ.என்.ஜி.சி., 243.45 -2.75 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,306.50 13.50 நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை) எஸ் பேங்க் 23.67 0.65 சுஸ்லான் எனர்ஜி 55.74 0.66 அசோக் லேலண்டு 157.50 5.05 என்.ஹெச்.பி.சி., 74.46 0.67 என்.எம்.டி.சி., 88.47 -2.46 நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை) என்.பி.சி.சி., (இந்தியா) 107.35 2.19 ஐநாக்ஸ் விண்டு 89.73 1.70 ஏஞ்சல் ஒன் 352.00 12.50 பந்தன் பேங்க் 210.35 5.75 ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 667.50 -13.00 மற்ற சில பங்குகளின் விலை விவரம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் 409.65 3.15 கரூர் வைஸ்யா பேங்க் 289.55 0.60 எல்.ஐ.சி., 406.10 6.75 டாடா பவர் 403.00 9.45 டைம் டெக்னோபிளாஸ்ட் 177.80 8.32 குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 23,984.85 24,011.40 23,817.80 23,853.90 நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி ஏற்றத்துடனே காணப்பட்டது. 361 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய நிலையில், நாளின் இறுதில் 231 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு குறைந்தபட்சமாக 1.09 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 1.76 சதவீதமும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 3.96 சதவீத உயர்வுடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.07 சதவீத சரிவுடனும் காணப்பட்டன. வர்த்தகம் நடந்த 3,453 நிறுவனங்களின் பங்குகளில் 2,510 ஏற்றத்துடனும்; 830 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன. கடந்த கால இறக்கத்தில் இருந்து மீட்சி என்ற நிலையில் இருக்கும் நிப்டி மறுபடியும் ஏற்றம் கண்டு 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது. இது ஏற்றத்திற்கான பலம் அதிகரிப்பதையே காட்டுகிறது. மொமெண்டம் இண்டிக்கேட்டர்களுமே ஏற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற தோற்றத்தை உறுதி செய்யும் வண்ணமே இருக்கின்றன. குறுகிய காலத்தில் 24,060 என்ற லெவலில் வலுவான ஒரு ரெசிஸ்டென்ஸும், 23,770ல் நல்லதொரு சப்போர்ட்டும் இருக்கிறது. தற்போதைய சூழலில் 24,060க்கு மேலே சென்றால் 24,250 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. 23,770க்கு கீழே சென்றால் 23,540 வரை சென்று திரும்பக்கூடும். மொத்தத்தில் 23,770க்கு மேலே இருக்கும் வரை டெக்னிக்கலாக நிலைமை சற்று புல்லிஷாகவே இருப்பதால் பெரிய அளவிலான இறக்கத்தை எதிர்பார்க்க முடியாது. ஆதரவு 23,770 23,700 23,625 தடுப்பு 23,970 24,085 24,150


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை