உச்சம் தொட்ட மருத்துவ காப்பீடு
ந டப்பு நிதியாண்டில், மருத்துவ காப்பீடு புதுப்பிப்பு, இதுவரை இல்லாத உச்சம் தொட்டிருப்பதாக, 'பாலிசிபஜார்' நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அதில் கூறியிருப்பதாவது: மருத்துவ காப்பீடு குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை அடுத்து, நடப்பு நிதியாண்டில் இதுவரை, மருத்துவ காப்பீடு புதுப்பித்தல், வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. புதிய காப்பீடு வணிகத்தில், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, உடல் பருமன், இதய கோளாறு போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்கு காப்பீடு செய்வோர், 25 சதவீதம் அதிகரித்துள்ளனர். குறைந்த பிரீமியத்தில் பல்வேறு கிளெய்ம் வாய்ப்புகள் சேர்க்கப்படுவதும், மருத்துவ காப்பீடு எடுப்போரை ஊக்குவிப்பதாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.